2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பதவியை தேடி போகின்றவன் நான் இல்லை'

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எஸ்.எம்.அறூஸ்

சிறாஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறி முஸ்லிம் காங்கிரஸில் இணையப்போகின்றார் என்ற செய்தி அண்மைக்காலமாக காட்டுத் தீ போல் சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் பரவி வருகின்றது. இது தொடர்பில் எந்த உண்மையுமில்லை என கல்முனை மாநகர நபை முதல்வர் சீறாஸ் மீராசாகிபு இன்று காலை (06) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் 2011ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெறும் 45 நாட்களுக்குள் அரசியல் புரட்சி செய்து கல்முனை மாநகர முதல்வர் என்கின்ற அரசியல் அதிகாரத்தைப் பெற்று 2 வருடங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் பணி செய்து அப்பதவியை விட்டு வெளியேறினேன் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அக்காலப்பகுதியில் என்னால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணியினை மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

நான் பதவி ஆசை பிடித்தவனாக இருந்திருந்தால் அன்று அந்த மாநகர முதல்வர் பதவியை இராஜினாமா செய்யாது தொடர்ந்தும் இன்றுவரை முதல்வராக இருந்திருக்க முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஒருவார கால அவகாசத்தின் பின்னர் அப்பதவியினை இராஜினாமாச் செய்தேன்.

ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் நான் பதவிக்காக யாருக்கும் பின்னால் அலைந்து, காலில் விழுந்து, மண்றாடி, கெஞ்சி, கதறி பதவியினை பெறுபவன் நானில்லை என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நான் இந்த நிமிடம் வரை கட்சியோடுதான் இருக்கின்றேன். தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக இருக்கின்றேன். அது யாராக இருந்தாலும் சரி அமைச்சர் ரவூப் ஹக்கீமாகவிருந்தாலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவாகவிருந்தாலும் அமைச்சர் ரிசாத்தாகவிருந்தாலும் எந்த தலைமையின் கீழ் நாமிருக்கின்றோமோ அந்த தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அதுவே எமது கொள்கை.

நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்ட பின்னர் ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸில் என்னை இணையுமாறும் பதவிகள் பல தருவதாகவும் கூறினார்கள். ஆனால், அவற்றை நாம் ஏற்கவில்லை. கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயற்படுபவன் நானில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X