Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 04 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனையிலுள்ள 10 பள்ளிவாயல்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக்கூட்டம் நேற்று (03) இரவு அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொங்றீட் வீதிகளை நிர்மாணித்தவர்கள் அவ்வீதிகளுக்கு தார் இடாமல் விட்டதால் இந்த கொங்றீட் வீதிகள் யாவும் சேதமடைந்து வருகின்றன. இவ்வீதிகள் அனைத்துக்கும் தார் இடுவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ள அதேவேளை, வடிகான்களுக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் மூடிகளும் போடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விடுபட்ட வீதிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் முற்று முழுதாக நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் கிராமிய மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுத்து அவர்களுக்கான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களையும் வழங்கி வருகின்றேன்.
அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்காக மட்டும் 30 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து அவர்களுக்கான குடிநீர் மற்றும் மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்கள் இவ்வாரம் வழங்கி வைக்கப்டவுள்ளன என்றார்.
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago