Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு கிழக்கு மாகாணத்தில் சீராக இயங்கும் போக்குவரத்து துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகத்துக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் அளவுக்கதிகமான நியமனங்கள் போக்குவரத்து சபையில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபையை சீராக கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனை சீர்செய்வதற்காக ஆட்குறைப்பு செய்ய வேண்டும். அதற்கான திட்டம் மிக விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஊழியர்களின் சேமலாப நிதி அதிகரித்து பல மில்லியனைத் தாண்டியுள்ளது. ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு பல மில்லியன் தேவைப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் 05 வருட காலத்துக்குள் எவ்வித நியமனங்களும் வழங்கப் போவதில்லை. நட்டத்தில் இயங்கும் போக்குவரத்து சாலை நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .