Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான கல்வி வலயம் உருவாகுவதை தான் வரவேற்பதாகக் கூறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், இருப்பினும், அவ்வலயத்தில் தமிழ்ப் பாடசாலைகள் இணைய வேண்டும் என்று வற்புறுத்துவதை கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
திருக்கோவில் செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தங்கவோலயுதபுரம், கஞ்சிகுடியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டு வேலையைச் செய்து முடிப்பதற்காக அவர்களுக்கு சீமெந்துப் பக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை (20) வழங்கப்பட்டன.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '2009ஆம் ஆண்டு 56 தமிழ், முஸ்லிம் பாடசாலைகளை சேர்த்து திருக்கோவில் கல்வி வலயத்தை தனியாக உருவாக்குவதற்குச் செயற்பட்டபோது, அவ்வலயத்தின் பொத்துவில் கோட்டத்திலுள்ள சுமார் 16 முஸ்லிம் பாடசாலைகள் அக்கரைப்பற்று வலயத்துடன் தொடர்ந்து இயங்கும் என்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் அப்போது தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 2009ஆம் மிகச் சிரமத்துக்கு மத்தியில் தமிழ்ப் புத்திஜீவிகள், அரசியல் தலைவர்களின் முயற்சியின் காரணமாக திருக்கோவில் தனியான கல்வி வலயமாக உருவாக்கப்பட்டு, தற்போது அவ்வலயத்திலுள்ள 43 தமிழ்ப் பாடசாலைகளுடன்; சிறந்த நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகின்றது' என்றார்.
'தற்போது பொத்துவில் பிரதேசத்துக்குத் தனியான கல்வி வலயம் கோரும் நிலையில், அப்பிரதேசத்திலுள்ள 8 தமிழ்ப் பாடசாலைகளையும் அவ்வலயத்துடன் இணைப்பதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முனைப்புக் காட்டுகின்றனர். இது எவ்வகையில் நியாயமானது என்பது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
இதனைத் தான் இன, பிரதேச ரீதியான வேறுபாடுகளை வெளிப்படுத்தம் வகையில் கூறவில்லை. சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் சமூகங்கள்; விட்டுக்கொடுத்தும்; அச்சமூகங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago