2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

புதிய உறுப்பினராக ஏகாம்பரம் நியமனம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபை தமிரசுக் கட்சியின் புதிய உறுப்பினராக குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர சபை ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நளீம் எம்.பதுர்தீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பதவி வகித்த ஏ.அமிர்தலிங்கம் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அடுத்த நிலையில் இருந்த கு.ஏகாம்பரம் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X