2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டவர்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இதனால் அவர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் ஆசிரியர் அல்இஹ்ஸான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய குழுவின் விஷேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்த்தர்களான எஸ்.எச்.பர்ஸாத் கான்,சட்டத்தரணி அப்துல் றஸாக்,எம்.எல்.எம்.ஜமால்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த கால ஆட்சியில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர்.

அபிவிருத்தியிலும் தொழில் வழங்குவதிலும் ஏனைய விடயங்களிலும் பாரபட்சம் காட்டப்பட்டது.
இதனால் எமது ஆதரவாளர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான குறைபாடுகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X