2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

சம்மாந்துறை மற்றும் கிண்ணியா கல்வி வலயங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை கிழக்கு மாகாண தொழிற்சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

'கிழக்கு மாகாணத்திலுள்ள 12 தமிழ் மொழி மூல கல்வி வலயங்களுள் சம்மாந்துறை மற்றும் கிண்ணியா ஆகிய வலயங்களுக்கு மாத்திரம் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பு விசேட ஆளணி வகையைச் சேர்ந்த அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

பாட ரீதியான அபிவிருத்திக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றி வந்த இவ்விருவரும், கல்வி நிர்வாக சேவையின் முதலாம் வகுப்பு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதானது முறையற்றதும் கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பை மீறும் செயற்பாடுமாகும்.

இவற்றைச் சுட்டிக்காட்டி தமது சங்கம் மேன்முறையீடு நீதிமன்றத்தில் தக்கால் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள விசாரணைக்காக அதன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X