2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

77 பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொது அரச பாடசாலைகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி,காணி அபிவிருத்தி நீர்வழங்கள் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திருமதி டபிள்யூ.ஜீ.எம்.அரியவதி கலப்பதி  வழங்கிவைத்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், 65 போருக்கு காணி அனுமதிப் பத்திரங்களும்12பேருக்கு காணி அளிப்பு பத்திரமும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன்.அமைச்சின் அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,உதவிச் செயலாளர் எஸ்.ஜெரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .