2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பெரு நகர அபிவிருத்தி; அறிக்கை சமர்ப்பிக்கப் பணிப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை -சம்மாந்துறை ஒருங்கிணைந்த பெரு நகர அபிவிருத்திக்கான திட்டமிடல் அறிக்கையை அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும்   நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பணித்துள்ளார்.

மேற்படி பெரு நகர அபிவிருத்திக்கான திட்டமிடல் பணியின்; முன்னேற்றம் தொடர்பில் கல்முனை மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (4) ஆராயப்பட்டபோதே, அவர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்போது, மேற்படி திட்டமிடல் பணியை துரிதமாக பூர்த்தி செய்யும் வகையில்; அனைத்துத் திணைக்களங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X