2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை கிழக்கு மாகாண மக்களும் ஏற்றுக்கொள்கின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,பைஷல் இஸ்மாயில்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயபூர்வமான கோரிக்கையை கிழக்கு மாகாண மக்களும் ஏற்றுக்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் சனிக்கிழமை (09) அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'நாட்டின் பொருளாதரத்தை வலுப்படுத்தி தலைநிமிர்ந்து வாழவேண்டியவர்கள், இன்று சம்பள உயர்வுக்காக வீதிகளில் இறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளமை  கவலை அளிக்கின்றது' என்றார்.  

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகும்.

அதிகாரத்தில் உள்ளவர்களால் மாகணங்கள், சமூகங்கள் மீது பாராபட்சம் காட்டப்படுவதாலேயே பல பகுதிகளில் மக்கள் உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X