2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை சீர்திருத்த பாடசாலையில் ஒப்படைக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மோட்டார் சைக்கிள் திருடிய 13 வயதுச் சிறுவனை கெப்பிட்டிபொல சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் ஒப்படைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், இன்று திங்கட்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.

03 வருடங்களுக்கு அச்சீர்திருத்தப் பாடசாலையில் இருக்கும் வகையில் சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் ஊடாக சிறுவனை ஒப்படைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை (05) நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அடுத்து, அதன் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த சிறுவன் மோட்டார் சைக்கிளை தெரியவந்த நிலையில், அச்சிறுவன் கைதுசெய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X