2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'மேய்ச்சல்தரை வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 08 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சர்வோதயப்புரக்; கிராமத்தில் மேய்ச்சல்தரையை பெற்றுத்தருமாறு கோரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்;க்கிழமை கால்நடைப்  பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொத்துவில் பாற்பண்ணையாளர்கள் சங்கம், கால்நடை அபிவிருத்திச்சங்கம், சமூக சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் பிரதேச செயலாளர் என்.எம்.முஸாரத்திடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'சர்வோதயபுரக் கிராமத்தில்; மேய்ச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்ட 1,500 ஏக்கர் காணிக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கொண்டுசென்றால், அக்காணி வன இலாவுக்கு உரியது என்று கூறி அதிகாரிகள் தடுக்கின்றனர். 

இதேவேளை, அக்காணியை அண்மித்த இடத்துக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கொண்டுசென்றால், பிரதேச செயலாளர் மற்றும் விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தர் தடுக்கின்றனர். எனவே, கால்நடைகளுக்கான  மேய்ச்சல்தரையைப் பெற்றுத்தர வேண்டும்' என்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X