2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முஸ்லிம்களுக்கிருந்த பீதி நல்லாட்சியில் நீங்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த அச்சம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  நல்லாட்சி அரசாங்கத்தின்; வழிகாட்டலில் நீpங்கியிருக்கிறது என கல்முனை பிரதேச செயலக  திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

நல்லாட்சியின் ஓராண்டுப் பூர்த்தியையொட்டி கல்முனை பிரதேச செயலக திவிநெகுமப் பிரிவு ஏற்பாடு செய்த மர நடுகை நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை  பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய விளையாட்டு மைதான வளாகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இன்றைய நல்லாட்சி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லாட்சியாகக் காணப்படுகின்றது. இந்த நல்லாட்சியில்  மக்கள் பயன் பெறக்கூடிய வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நல்லாட்சியில் நாட்டில் அமைதி, சமாதானம், சௌஜன்யமும் விரும்பும்  அனைத்து மக்களினதும்  ஒப்பற்ற விருப்பை பெற்று ஒராண்டை நிறைவு செய்திருப்பது தேசத்தை நேசிக்கும் சகல பிரஜைகளுக்கும் மகத்தான வெற்றியாக பார்க்க முடிகிறது' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X