2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முஸ்லிம் சமூகத்துக்குள்ள ஒரேயொரு ஆயுதம் கல்வியாகும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு  இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் கல்வியாகும். கல்வி என்ற ஆயுதத்தின் மூலமே முஸ்லிம் சமூகமும் எதிர்காலச் சந்ததியும் தலைநிமிர்ந்து வாழ முடியுமென விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தை தரம் உயர்த்திய நிகழ்வு அங்கு நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதைய நல்லாட்சியில் கல்வித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து கிராமப்புற பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதற்காக வரவு -செலவுத்திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்;ளது. அந்த வகையில், தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடின்றி  கூடுதல் அபிவிருத்திகளை செய்ய வேண்டுனெ;பதற்காக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ன. இந்தத் திட்டத்தின் கீழ் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் முதற்கட்டமாக பல பாடசாலைகளைத் தெரிவுசெய்து முன்மொழிந்திருக்கின்றோம். படிப்படியாக ஏனைய பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு முன்மொழியப்படும். வளர்ந்த பாடசாலைகளுக்கு சமமாக சிறிய பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும்.

அந்த வரிசையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களைக் கொண்ட இந்தப் பாடசாலையும் அபிவிருத்தி செய்யப்படும். சுனாமியில் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் நான் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றேன்' என்றார்.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், அதிதிகளாக கலாநிதி அஷ்சேய்க் எம்.எல்.முபாறக் மதனி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எ.றஹீம்; உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.;

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X