2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'2 வருடங்களில் எவரும் சித்தியடையவில்லை'

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கடந்த 2 வருடங்களாக எமது பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எவரும் சித்தியடையவில்லை என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கின்றது என அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி தெரிவித்தார்.

தரம் 4இல் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை (12) பாடசாலையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது பாடசாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று நல்ல நிலைமையில் சிறந்து விளங்கியது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது பாடசாலை எவ்வாறு இருந்ததோ அதே நிலைமையைப் போன்று மீண்டும் எமது பாடசாலையை முன்னேற்ற வேண்டும்.

அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் பெற்றோர்களாகிய நீங்கள் தரவேண்டும். அதன் மூலம்தான் எமது பாடசாலையை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லலாம்.

அதிபரும் ஆசிரியர்களும் இணைந்து செயற்பட்டால் மட்டும்போதாது, பெற்றோர்களாகிய நீங்களும் எங்களுடன் இணைந்து கைகோர்த்து செயற்பட்டால் மட்டும்தான் எமது அறபா வித்தியாலயத்தை எதிர்வரும் 2016ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகமான மாணவர்களை சித்தியடைய வைக்கலாம்.

அதற்கான சகல யுத்திகளையும் ஆசிரியர்களாகிய நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் தரம் 5இற்கான சிறந்த ஆசிரியர் ஒருவரை கொண்டு வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் நான் செய்துவருகின்றேன்.

கடந்த கால நிகழ்வுகள் யாவும் மறக்க முடியாதவையாக உள்ளன. அதற்கான தவறுகளை அதிபராகிய நானும் ஆசிரியர்களும் பொறுப்பேற்றுக்கொள்கின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X