Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, நல்லதம்பி நித்தியானந்தன், பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறை காணப்படுவதினால் அவற்றை நிவர்த்திக்க, விசேட நிதியொதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என, கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்தக் கூட்டம், ஜனாதிபதியின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) நண்பகல் நடைபெற்றது.
இதன்போது, 9 மாகாணங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் பங்கேற்றதுடன், அனைத்து முதலமைச்சர்களும் பங்கேற்றிய முதல் கூட்டமாகவும் இது அமைந்திருந்தது.
அத்துடன், கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு இணங்க, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுங்கும் சிறு உள் வீதிகளை அமைப்பதற்கு நிதியொதுக்குவதற்கும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதுடன், கிழக்கு முதலமைச்சரின் யோசனைக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் முதலமைச்சர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
அது மாத்திரமன்றி உள்ளூராட்சி மன்றங்களூடாக மேற்கொள்ளப்படும் நிதியொதுக்கீடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் முதலமைச்சர்களின் முழு அனுமதியுடனேயே முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிதியை, எதிர்வரும் மாதத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி நிதியமைச்சருக்குப் பணித்திருப்பதுடன், இம்முறை வரவு - செலவுத்திட்டத்தினூடாக குறைக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது கிழக்கிலும் நாட்டிலும் தலைதூக்கியுள்ள இனவாதம் தொடர்பிலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியின் கவனத்துக்குக்கொண்டு வந்துள்ளதுடன், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Jul 2025
19 Jul 2025