2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பம் கோரல்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்திற்கான முஸ்லிம் விவாக பதிவாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் உரிய பிரிவுக்குள் நிரந்தர முகவரியை உடையவராகவும் 30 வயதுக்கு குறையாமல் இருப்பதோடு, 60 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். விவாகம் செய்தவராக இருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் போன்றவை தொடர்பான மேலதிக விவரங்களை மாவட்ட செயலாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் போன்றவற்றில்; தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பெற்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம் அம்பாறை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X