Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
இனிமேல்; வைத்தியசாலையில் வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டுமென்பதுடன், குறைந்தது ஒரு வைத்தியராவது வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது.
பாலமுனைப் பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்தனர். இதன்போது, அவ்வைத்தியசாலையில், வைத்தியர் எவரும் கடமையில் இல்லை. இந்நிலையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் இல்லாமை தொடர்பில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் முன்னடுத்ததுடன், தொலைபேசி மூலம் வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர்களை அழைத்தார்.
இனிவரும் நாட்களில் வைத்தியர்கள் வைத்தியசாலையில் கடமையில் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு வைத்தியராவது வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .