2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

4 வியாபாரிகள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 11 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாடு அறுத்து இறைச்சி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் வீதியில் மீன் விற்பனை இரு வியாபாரிகள் மீதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்;;;;.எம்.சாபீர்;; நேற்று வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே குறித்த மாடு அறுக்கும் இடத்தில் மாடு அறுக்காமல் வேறு இடத்தில் மாடு அறுத்து விற்பனை செய்த இரு வியாபாரிகளும் மற்றும் வீதி ஒரத்தில் மீன்  விற்பனை இரு நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

உணவுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் இவ் வழக்கை விசாரணைக்காக  எதிர்வரும ;25ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .