2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிந்தவூர் முஸ்லிம் மையவாடியின் புனரைமைப்புக்கு அமைச்சர் அதாவுல்லா 2 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிந்தவூர் முஸ்லிம் மையவாடியின் புனரைமைப்புக்காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாவுல்லா சுமாh 2 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளார்.

மிக நீண்ட காலமா புனரமைக்கப்படாது காணப்பட்ட இந்த மையவாடி புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அமைச்சர் அதாவுல்லாவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்நிதி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

இப்புனரமைப்புப் பணியின் ஆரம்ப கட்ட நடவடிக்கையின் பொருட்டு மைவாடிக்கான சுற்றுமதில் நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • hilmy ntr Wednesday, 07 November 2012 04:54 PM

    சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X