2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி நெறியை முடித்த 13 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

Super User   / 2010 நவம்பர் 26 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு  அமைப்பின்  அனுசரனையுடன் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ்  தச்சுப் பயிற்சி நெறியை முடித்த 13 மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக தலா 15,000 ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணமும் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று சமூக நல்வாழ்வு அமைப்பின்  தலைமையலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் கே.பிறேமலதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எஸ்.டப்ளியூ.ஓ நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளர் வி.நாகேந்திரன், சுவாட் அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர் வி.பரமசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிநெறியினை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் தொழில் உபகரணங்களையும் வழங்கிவைத்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X