2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை பகுதிகளில் 3 நாள் தொடர் மின்வெட்டு

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை 8.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திடீர் திருத்த வேலைகளை முன்னிட்டே மேற்படி மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. 

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.

                                                                                                                                                                                                                                                                       
                                      
                                                            





  Comments - 0

  • meenavan Thursday, 06 December 2012 08:50 AM

    3 நாள் தொடர் மின் வெட்டு நிகழ்த்துவதட்க்கு அந்த அளவுக்கு பாரிய பாதிப்பு மின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ளதா? கடந்த மாதம் பதுளை மின் வழங்களில் ஏற்பட்ட பாதிப்பு அம்பாறை மாவட்டத்தில் சில தினங்களுக்கு மின் தடையை ஏற்படுத்தியது,இப்படியான சந்தர்பங்களை கல்முனை மின் பொறியிலாளர் பிரிவினர் திருத்த வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது? கல்முனை மின் பொறியிலாளர் பிரிவினருக்கு மின் அதிர்வு வழங்கினால்தான் நேர்த்தியாக செயல்படுவார்களோ?

    Reply : 0       0

    ilmj Thursday, 06 December 2012 10:39 AM

    தயவு செய்து இரவு நேரத்தில் மாத்திரமாவது மின்சாரத்தை வழங்குங்கள்.

    Reply : 0       0

    mmohideens Friday, 07 December 2012 02:07 PM

    அம்பாறை மாவட்டத்திக்கு ஏன் அரசுக்கு ஓர் அனல் மின்சார நிலையம் அமைக்க திட்டமிட முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X