Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 25 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையை ஊக்குவிக்குவிப்பதற்காக உலக உணவு விவசாய ஸ்தாபனம் கிழக்கு மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக மரக்கறி விதைகளை வழங்கி வருவதாக உலக
உணவு விவசாய ஸ்தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.மார்க்கண்டு தெரிவித்தார்.
20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் தெரிவு செய்யப்பட்ட 10 ஆயிரம் வீட்டுத்தோட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு தலா 700 ரூபா பெறுமதியான பாகல், தக்காளி, மிளகாய், பயிற்றை, கீரை ஆகிய 5 வகையான விதைகளை பிரதேச செயலக ரீதியாக வழங்கி வருகின்றது.
இதேவேளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 52 மேட்டு நிலபயிர் செய்கையாளர்களில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்வதற்காக 900 பேருக்கு சோளம், 435 பேருக்கு பாசிப்பயறு, 67 பேருக்கு உழுந்து, 1500 பேருக்கு கௌபி, 150 பேருக்கு நிலக் கடலைகளுக்கான விதைகள் என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago