2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆதிவாசிகளுக்கு 130 மில்லியன் நிதியில் 30 வீடுகளை நிர்மாணம்

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை, மஹா ஓயா - பொல்வத்த கிராமத்தின் ஆதிவாசி மக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் 130 மில்லியன் நிதியில் 30 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தயட்ட கிருள்ள அபிவிருத்தி திட்டத்தின் தலைவரும் அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, ஸ்ரீயானி ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்விஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மஹிந்த சிந்தனையின் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மக்களும் அனைத்து அபிவிருத்திகளையும் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதிவாசி இந்த வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X