Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் சேனநாயக்க சமுத்திரத்தில் வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்தது.
சம்மாந்துறை, மல்வத்தை, மத்தியமுகாம், சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், மகாஓயா, தமண, லகுகல ஆகிய கமநல சேவைகள் மத்திய நிலையங்களில் பிரிவிற்குட்பட்ட வயல் நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளநீர் வயல் நிலங்களில் வேகமாக பாய்ந்து ஓடுவதனால் வேளாண்மைகள் சாய்ந்து மண்ணில் புதையுண்டு காணப்படுகிறது. அறுவடை செய்ய இன்னும் சில தினங்களே இருப்பதனால் இவ்வாறு வேளாண்மைகள் அழிவடைந்தள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
16 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago
54 minute ago