2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கல்முனையில் வாகன விபத்து; 3 பொலிஸார் காயம்

Super User   / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ், எஸ்.மாறன், எம்.சி.அன்சார்)

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியுள்ள பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியுடன் டிப்பர் ரக  லொறியொன்று மோதியதில் மூன்று பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

மருதமுனையிலிருந்து பொலிஸ் ஜீப் வண்டி கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த போது கல்முனையிலிருந்து வந்து கொண்டிருந்த டிப்பர் ரக லொறி  பொலிஸ் ஜீப் வண்டியுடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பொலிஸார், கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டிப்பர் ரக லொறிச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0

  • MOHAMED ITHREES Sunday, 05 December 2010 05:59 PM

    பயங்கரமா இருக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X