2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் ரி56 ரக துப்பாக்கி மீட்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று புதன்கிழமை காலை ரி56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று நகர் பிரிவின் மொறாவோடை எனும் களப்புப் பகுதியிலிருந்து இத்துப்பாக்கி மீனவர் ஒருவரின் வலையில் சிக்கி உள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை 6.30 மணியளவில் மீனவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக குறித்த களப்பு பிரதேசத்தில் மீன்பிடி வலையினால் வீசிக்கொண்டிருந்த வேளை துப்பாக்கி ஒன்று வலையில் அகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று குறித்த ரி56 ரக துப்பாக்கியை மீட்டுள்ளனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .