2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய 7 பேர் கைது

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.மாறன்)


திருக்கோவில், சாகாமம் - ஊரக்கை எனும் இனங்காணப்பட்ட தொல்பொருள் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, புதையல் தோண்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய கௌண்டி கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்கா தலைமையிலான அம்பாறை புராதான விஞ்ஞான பகுப்பாய்வுப் பிரிவின்  பொலிஸ் பரிசோதகர் உபூல் மற்றும் அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேச பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிகையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரனைகளை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X