Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 81,574 குடும்பங்களும், 312,210 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
இதன்படிஇ சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 6,348 குடும்பங்களும், 25,700 பேரும்.சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 15,779 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 9,000 குடும்பங்களும். 35,000 பேரும். காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் 4,672 குடும்பங்களும் 18,574 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 6,657 குடும்பங்களும் 23,525 பேரும், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் 8,450 குடும்பங்களும். 30,000 பேரும், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவில் 10,098 குடும்பங்களும், 35,000 பேரும், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 7,798 பேரும், 31,818 பேரும், அட்டானைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 10,245 குடும்பங்கள் 39,848 பேரும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 1,500 குடும்பங்களும், 6,300 பேரும்இ இறக்காமம் பிரதேச செயலப் பிரிவில் 61 குடும்பங்களும், 298 பேரும், உகன பிரதேச செயலகப் பிரிவில் 400 குடும்பங்களும், 1,150 பேரும், தெஹியத்தக் கண்டிய 28 குடும்பங்களும், 85 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவில் 400 குடுப்பங்களும், 1,800 பேரும், அம்பாறை பிரதேசப் பிரிவில் 138 குடும்பங்களும், 505 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மேலும் தெரிவித்தார்.
30 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago