2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

1000ரூபா கொடுப்பனவுக்கான அட்டைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

கல்முனைப் பிரதேசசெயலகப் பிரிவில் வதியும் 70வயதை பூர்த்தி செய்தோர்களுக்காக மாதாந்த 1000ரூபா கொடுப்பனவுக்கான அட்;டைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் இடம்பெற்றது.

70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு சில மாதங்களாக வங்கிகளின் ஊடாக வழங்கப்பட்டு வந்த 1000ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாக இதனை அட்டைகளின் மூலம் தபால் நிலையங்களிலும், உப தபால் நிலையங்களிலும் வழங்குவதற்கான முறைமையினை அரசாங்கம் அமுல்படுத்தி உள்ளது.

இதற்கமைவாகவே கல்முனைப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட 453 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மாதாந்த 1000ரூபா கொடுப்பனவுக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.

கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.நஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், சமுர்த்தி தலைமை அலுவலக முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட கிராம உத்தியோத்தர்கள்; பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X