2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

120 குடும்பங்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்து வந்த குடும்பங்களுக்கு எல்.டி.ஓ காணி உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ், மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் அனுருத்த பியதாச, உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல் மஹ்றூப், காணி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றாபி, சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.இத்ரீஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் 120 குடும்பங்களுக்கு காணி உத்தரவுப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவளை, மஹிந்த சிந்தனையின் கீழ் சமுக சேவைத் திணைக்களத்தால் வலது குறைந்தோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான காசோலைகளும்; வழங்கி வைக்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X