Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா, எம்.எஸ்.எம். ஹனீபா
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3ஆவது தடுப்பூசியாக பைசர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் திட்டம், கல்முனை மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளி்ல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசியை பெற்று 03 மாதங்கள் பூர்த்தியானவர்கள், மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன், இன்று (19) கேட்டுள்ளார்.
தடுப்பூசி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்கள் மற்றும் தடுப்பு மருந்து ஏற்றும் மையங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றிற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும், 07 ஆதார வைத்தியாசாலைகளிலும், 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் விசேட மையங்களிலும் இத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சண்முக மகா வித்தியாலயத்தில் முதற்கட்டமாக நேற்று (18) பூஸ்டர் ஏற்றப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு களத் தடுப்புப் பிரிவினர் இணைந்து 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago