Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
பொத்துவில் அறுகம்பைப் பிரதேசம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளால் களைகட்டி வருகின்றது.
இலங்கையிலுள்ள சுற்றுலா பகுதிகளில் பொத்துவில், அறுகம்பைப் பிரதேசம் மிகவும் முக்கியமானதொன்றாகும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதிகளில் இப்பிரதேசத்துக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகமாக வருகை தருகின்றனர்.
அந்த வகையில் வருடமொன்றுக்கு சுமார் ஏழாயிரம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இப் பிரதேசத்துக்கு வருகை தருவதாக, அறுகம்பை சுற்றுலா அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஹீம் தெரிவிக்கின்றார்.
பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான 49 ஹோட்டல்களும், 30 உணவுச் சாலைகளும் அமைந்துள்ளன. இவைகளில் ஆறு ஹோட்டல்கள் சுற்றுலா அதிகாரசபையின் அனுமதி பெற்றவைகளாகும்.
பிரித்தானியா, அவுஸ்ரேலியா, சுவிஸ், ஜேர்மன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளே இப்பிரதேசத்துக்கு பெருமளவில் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறுகம்பைப் பிரதேசம் 1996 ஆம் ஆண்டு சுற்றுலாத் தளமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
எவ்வாறிருந்த போதும், யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் அறுகம்பைப் பிரதேசத்தை நோக்கி வருடமொன்றுக்கு இரண்டாயிரத்துக்குட்பட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகளே வருகை தந்தனர். ஆனால் தற்போது இந்தத் தொகை ஏழாயிரமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, உள்ளுர்வாசிகளும் அறுகம்பைப் பிரதேசத்துக்கு அதிகளவில் உல்லாசப் பயணிகளாக வந்து போவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago