Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
பொத்துவில் அறுகம்பை கடல் பிரதேசத்தில் கடல் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.
அறுகம்பை கடல் பிரதேசத்தில் கடல் சறுக்கல் விளையாட்டில் கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒர் சபீரா (வயது 18) ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய அலையுடன் கடல் சறுக்கல் மிதவை தலையில் தாக்கியதில் படுகாயமைடைந்தார். இவரை கடலிலிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடல் சறுக்கல் விளையாட்டில் பெயர் பெற்ற பொத்துவில் உல்லை அறுகம்பைப் பிரதேசத்தில் இவ்விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி வழங்க எவ்விதமான சிகிச்சை நிலையமும் இல்லை என கடல் சறுக்கல் விளையாட்டு வீரர்களும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago