2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறுவர், முதியோர் தின நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)

மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச செயலகம் நடத்திய சர்வதேச சிறுவர்தின, முதியோர்தின விழா 2010, நேற்று பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் முதியோர்கள் பற்றிய விழிப்புணர் வைத்துண்டும் துண்டுப்பிரசுரங்கள விநியோகிக்கப்பட்டதுடன், மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சிறுவர்களின் கலை நிகழ்வுகள் ,சமூர்த்தி சிசுதிரிய புலைமைப் பரிசில்கள் வழங்கல், முதியோருக்குப் பரிசில்கள் வழங்கல், முதியோர்தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்குதல், சிறந்த சிறுவர் கழகங்களுக்கான கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கணக்காளர் இ.காத்திகேசு, நிருவாக உத்தியோகத்தர் வ.செல்வராசா, கிராம உத்தியோகத்தர் வ.இராசதுரை, முகாமைத்துவப் பணிப்பாளர் சமூர்த்தி அலுவலகம் எஸ்.ஜெயராசா, சமூக நலம்புரி அமைப்பின் தலைவர்.வீ.ஆர்.மகேந்திரன், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய அதிபர் பொ.வன்னியசிங்கம், களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.மானவடு, சடோ நிறுவனத்தின் பணிப்பாளர் என்.நிரஞ்சித், பிரதேசமட்ட முதியோர் சம்மேளனத் தலைவர் க.தர்மரெத்தினம், பிரதேசமட்ட முதியோர் சம்மேளன செயலாளர் பேரின்ப நாயகம் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .