Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் முகம்மது அன்சார் மற்றும் முகம்மட் ரமீஸ் பஸ்மிர் ஆகியோரே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி இவ்விருவரும் கல்முனையைச் சேர்ந்த முகம்மது யூசுப் முகம்மது பரீட் என்பவரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர் சத்திர சிகிச்சைக்குப் பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜுலை 07ஆம் திகதி மரணமடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேற்படி வழக்கோடு தொடர்புபட்டதாக கூறப்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான ஏ.எம்.அக்பர் என்பவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
மரமொன்றில் மாங்காய் பறித்ததால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்தே இக்கத்திக் குத்து இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
46 minute ago
51 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
52 minute ago