2021 மே 07, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெறுவதாக தகவல்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெறும் மாவட்டமாக அம்பாறை மாவட்டமே காணப்படுகிறது என கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.எம்.சறூக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் தொடர்பாக கடமை புரியும் பிரதான மூன்று அமைப்புக்களான சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நன்னடத்தை காரியாலயம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் பெண்கள் சிறுவர்கள் விசேட பிரிவு ஆகிய அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றிய மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகத்தராகிய நாங்கள் மக்களுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது அவர்களால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அமைப்புக்கள் அனைத்தும் சிறப்பாக செயற்பட்ட போதும் இந்த செயல்களுக்காக சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானவர்கள் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டுவிட்டு சட்டத்திலுள்ள நெளிவு சுளிவுகளை பயன்படுத்தி தப்பித்து கொள்கின்றனர் எனக் கூறினார்கள்.

எனவே இந்த விடயம் தொடர்பாக மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளதனால் இவற்றை கருத்தில் கொண்டு மனித உரிமை ஆணைக்குழுவினை கல்முனை பிராந்திய அலுவலகமானது தம்மிடமுள்ள பிராந்திய வலையமைப்பினை பயன்படுத்தி சந்தேக நபர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்ளாதிருப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இந்தப்பிரதேசத்தில் உள்ள சட்டத்தரணிகளின் திறமைகளை சிறுவர் உரிமை மீறல்களை குறைப்பதற்கு எதிர்காலத்தில் எவ்வாறு பயண்படுத்தலாம் என்பது பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நாங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தவுள்ளோம் எனக் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X