Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘e- Court’ ' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 150 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை நீதிமன்ற முறைமையை டிஜிட்டல்மயப்படுத்தல் தேசிய முன்னுரிமை மூலோபாயத் திட்டமாக அரசு அடையாளங் கண்டுள்ளது. குறித்த டிஜிட்டல் நிலையுருமாற்றச் செயன்முறையில் ஆரம்ப கட்டமாக தற்போது உயர்நீதிமன்றத்தின் வழக்குக் கோவை முகாமைத்துவத்திற்காக இணையத்தளமொன்றும், அதனுடன் இணைந்த இலத்திரனியல் முறைமை (e-CMS) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
உயர் நீதிமன்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வலையமைப்பு இணையத்தளமொன்று e- CMS முறைமை மேனமுறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, நீதிபதிகளின் நிறுவனம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இசைவாக்கம் செய்து கொள்வதற்கு ‘e- Court’ கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்மூலம் தேசிய நீதிமன்ற தரவுக்கட்டமைப்பு (National Judicial Data Grid) நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக எமது நாட்டின் நீதிமன்றங்கள் முகங்கொடுக்கின்ற வழக்குத் தாமதங்கள் தரவு வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் நீதிக்கான அணுகலுக்கு தடை ஏற்படல், நடவடிக்கை முறைகள், வினைத்திறன் இன்மை போன்றவற்றை இல்லாது செய்வதற்கு இயலமை கிட்டும். அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் 2026-2030 அரச முதலீட்டு வேலைத்திட்டம் மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' மூலோபாயத்துடன் இணங்கியொழுகி ‘e- Court’ கருத்திட்டத்தை பயனுள்ளவாறும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதற்காக 'க்ளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி ‘e- Court’ ' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 150 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago