2026 மார்ச் 16, திங்கட்கிழமை

QR முறையை பெறுவதில் சிக்கலா?

Freelancer   / 2026 மார்ச் 16 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

நாளை (17) அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு,  முழுமையாக வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக சட்டப்பூர்வமாக உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்காகப் புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

இவ்வாறான புதிய பதிவுகளுக்குத் தேவையான முறைமை மேம்படுத்தல் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

ஏதேனும் ஒரு QR குறியீட்டுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கத்தின் உரிமை மாறியிருந்தால் அல்லது அந்தத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால், அத்தரப்பினர் குறித்த தகவல்கள் அந்தந்த தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, அந்நிறுவனங்கள் வழங்கும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக முறைமையில் உள்ளீர்க்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. நிலவும் சிக்கல்களுக்கு 1919 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X