Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மருதமுனை தபாலகக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்றுக் காலை மருதமுனை மக்கள் மண்டபத்துக்கு அருகாமையில் இடம்பெற்றது. உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கட்டிடத்துக்கான அடிக்கல்லை நட்டு வைத்ததோடு நினைவுக் கல்லினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
மருதமுனை தபால் நிலைய தபால் அதிபர் பி.எம். அஸ்ஹர்தீனின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாணஅமைசர் எம்.எஸ். உதுமாலெப்பை, மாகாணசபை உறுப்பினர் எம்.எல். துர்கர் நயீம், கல்முனை மாநகரசபை மேயர் முன்னாள் செனட்டர் எஸ்.இசட்.எம். மசூர் மௌலானா மற்றும் சட்டத்தரணி எப்.எம்.அமீருள் அன்சார் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 23 ஆயிரம் மக்கள் வசிக்கும் மருதமுனை பிரதேசத்துக்குரிய அஞ்சல் அலுவலகமானது, கடந்த 47 வருடங்களுக்கும் மேலாக வசதிகள் குறைந்த, நெருக்கடியான வாடகைக் கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
51 minute ago