Menaka Mookandi / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு முன்னால், தனி நபர்கள் இருவரின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் நிர்மாணித்துக் கொடுத்த மாணவர்களுக்கான பஸ் தரிப்பிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாண்டிருப்பு கிருஷ்ணப்பிள்ளை மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் நிர்மாணித்துக் கொடுத்துள்ள மேற்படி தரிப்பிடத்தை பாண்டிருப்பு சிவஸ்ரீ சபாரத்னக் குருக்கள் திறந்து வைத்தார்.
இதன்போது, கல்முனை மாநகரசபை உறுப்பினர் அலகக்கோன் விஜயரத்தினம் மற்றும் கட்டிடத்தை நிர்மாணித்துக் கொடுத்த குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

58 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago