Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 28 , மு.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திருந்து இளைஞர் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட தேர்தல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாக, அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்; சேவைகள் உத்தியோகத்தரும் அட்டாளைச்சேனை பிரதேச வாக்களிப்பு நிலைய அதிகாரியுமான யூ.எல்.ஏ.மஜீத், 'தமிழ் மிரருக்கு'த் தெரிவித்தார்.
இத் தேர்தலில் மேற்படி பிரதேசம் சார்பில் மூவர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டிருந்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் தீகவாபி மற்றும் திராய்க்கேணி போன்ற சிங்கள, தமிழ் பிரதேசங்கள் அமைந்துள்ளபோதும் இத்தேர்தலில் முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பகுதிகளில் மொத்தமாக 881 இளைஞர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக வாக்களிப்பு நிலைய அதிகாரி மஜீத் மேலும் தெரிவித்தார்.
மேற்படி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை பிரதேச தேர்தல் மேற்பார்வை அதிகாரியாக அப்பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கடமையாற்றினார்.
இதேவேளை, காரைதீவு பிரதேச செயலகத்துக்கான வாக்களிப்பு நிலையத்தில் குறைந்தளவான வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருந்ததாக, காரைதீவு பிரதேச செயலாளரும் காரைதீவு பிரதேச தேர்தல் மேற்பார்வை உத்தியோகத்தருமான எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேற்படி தேர்தலில் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து மொத்தமாக ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இவர்களில் மூவர் முஸ்லிம்கள், இருவர் தமிழ் இளைஞர்களாவர்.
இத் தேர்தலில் வாக்களிப்பதற்கு காரைதீவு பிரதேசத்தில் மொத்தமாக 679 இளைஞர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
இன்றைய தேர்தலில் காரைதீவு வாக்களிப்பு நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரியாக காரைதீவு பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியான எஸ்.நடேசகுமார் கடமையாற்றினார்.
51 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
54 minute ago
1 hours ago