2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை பஸ் நிலைய கடைகள் விரைவில் மக்களுக்கு: மசூர் மெளலானா

Super User   / 2010 நவம்பர் 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கல்முனை பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளும் பகிரங்க கேள்வி பத்திரம் மூலம் மிக விரவில் மக்களுக்கு கையளிக்கப்படும் என கல்முனை மாநகர மேயர் மசூர் மெளலானா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

19 கடை தொகுதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடமொன்றை யூ.எஸ்.எயிட் நிறுவனம் நிர்மாணித்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கல்முனை மாநகர சபையிடம் கையளித்தது. எனினும் இந்த 19 கடைகளும் இதுவரை மக்கள் பாவனைக்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் மசூர் மெளலானா குறுகையில்,

"இக்கடைகளின் பெறுமதியை மதிப்பிடுவதற்காக மதிப்பீட்டு திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளோம். பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை கிடைத்தவுடன் பகிரங்க கேள்வி பத்திரம் மூலம் வழங்குவோம்" என்றார்.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரனை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

"இந்த 19 கடைகளையும் மாநகர எல்லைக்குள் வாழும் மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குள் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதை ஏனையவர்களுக்கு காட்ட முடியும்.

இதற்கு முன்னர் இருந்த சில அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கினர். இதனால் இக்கடைகளையும் முன்னரை போன்று முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கிவிடுவார்கள் என்ற ஓர் அச்சமுன்டு.

அவ்வாறானதொரு தவறு இனி இடம்பெறக்கூடாது" என்றார்.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபையின் உயர் அதிகாரியொருவரை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியபோது,

இக்கடைகள் மூடப்பட்டுள்ளதனால் மாநகர சபைக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது.

இக்கடைகள் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.


 


  Comments - 0

  • Nafar Wednesday, 01 December 2010 08:34 PM

    இன்னும் சில வருடங்கள் போன பிறகு கொடுக்கலாமே ...............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .