2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகளால் அல்லலுறும் செல்வபுரம் பகுதி மக்கள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 29 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ஹனீக் அஹமட்)

குடிநீர் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளை மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் தமக்கு அவை தொடர்பில் நிலையானதொரு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோமாரி, செல்வபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

சுனாமி அனர்த்தத்தால் கோமாரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்படி செல்வபுரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டன.

ஆயினும், இந்த மக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்தி செய்யும் நிலையான திட்டங்களை அரசாங்கம் இதுவரை செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இப்பகுதியிலுள்ள கிணறுகள் மிக ஆழம் கொண்டவையாக இருந்த போதும், அவற்றில் நீர் ஊறுவதில்லை என்றும், ஒரு சில கிணறுகளில் நீர் கிடைத்தாலும், அவை உப்புத் தன்மையினைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் வீதியோரங்களில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள குழாய் கிணறுகளிலும் நீர் கிடைப்பதில்லை.

இதேவேளை, மக்களின் குடிநீர் தேவைகளுக்காக இப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்த் தாங்கியானது, தற்போது பயனின்றி இருப்பதாகவும், தாங்கியில் நீரை ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான மோட்டார் இயந்திரம் களவாடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

செல்வபுரம் மக்கள் தமக்கான குடிநீரை மூன்று கிலோமீற்றர் தூரத்திலுள்ள கோமாரிப் பகுதியிலிருந்தே பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .