Suganthini Ratnam / 2010 நவம்பர் 29 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஊழியர்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட 'கோப் சிற்றி' திறப்பு விழா இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.எல். சனூஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, விசேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அரசதுறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
.jpg)
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago