Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 25 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நேர்முகப் பரீட்சை, அக்கரைப்பற்று மாநர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு நடத்தப்பட்டது.
வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான குழுவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. அப்துல் மஜீத், மசூர் சின்னலெப்பை, அஷ்ஷேய்க் ஹனீபா மதனி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழுக்கம் மஜீத் உள்ளிட்ட பலர் உள்ளடங்கியிருந்தனர்.
மேற்படி நேர்முகப் பரீட்சைகளில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அக்கரைப்பற்று அமைச்சர் அதாஉல்லாவின் சொந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
21 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
29 minute ago