2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விரும்பிய இடங்களில் தனித்து போட்டியிடலாம் என்ற அரசாங்கதின் விட்டுக் கொடுப்பு முஸ்லிம் காங்கிரஸோடு ந

Super User   / 2011 ஜனவரி 31 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

உள்ளுராட்சித் மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பிய இடங்களில் தனித்து  போட்டியிடலாம் என்ற அரசாங்கதின் விட்டுக் கொடுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் காங்கிரஸோடு நீண்ட கால அரசியல் பயணம் மேற்கொள்ள எடுத்த சாணக்கியமான ஒரு முடிவாகும் என அக்கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான அஷ்-ஷஹீத் எம்.வை.எம்.மன்சூரின் 21ஆவது ஆண்டு நினைவு தின வைபவமும், துஆப் பிராத்தனையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நiடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு நினைவுப் பேருரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடு முழுவதும் 51 இடங்களில் தனித்தும், 22 இடங்களில் அரசோடு சேர்ந்தும் போட்டியிடுகின்றன. இது அரசின் முழு அங்கிகாரமாகும்.

இதற்கு ஜனாதிபதியி;ன் முழு ஆசிர்வாதத்தினைத் தந்து இருக்கின்றார். இது மஹிந்த ராஜபக்ஷவுடைய மஹிந்த சிந்தனையுடைய மிகச் சிறந்த பரிநாம வளர்ச்சியாகயிருக்கின்றது என்பதனை தைரியமாக சொல்ல விரும்புகின்றேன்  என்றார்.


  Comments - 0

  • vaasahan Tuesday, 01 February 2011 12:02 AM

    ஜனாதிபதிக்கு ஏசித் திரிந்த சூடு இன்னும் ஆறவில்லை. நாக்கைப்புரட்டி அவர் புகழ் பாடித்திரிகிறார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .