2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபத்தால் தடம்புரண்ட சிறிய ரக லொறி

Super User   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

நிந்தவூரிலிருந்து அட்டாளைச்சேனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்று இன்று திங்கட்கிழமை நண்பகல் வீதியிலிருந்து தடம்புரண்டு வயற் காணியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலுள்ள கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற இந்த லொறியின் பாகமொன்று திடீரென உடைந்ததையடுத்தே குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக குறித்த வாகனத்தில் பயணித்த சாரதியும், மற்றொருவரும் ஆபத்துகள் எதுவுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .