Kogilavani / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம், கலாசார, விளையாட்டு நிலையங்கள் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம் ஆகியவற்றிக்கு அருகாமையில் சம்மாந்துறை பிரதேச சபையினால் தினமும் கொட்டப்பட்டுவரும் குப்பை, கூளங்களினால் கல்வி கற்கும் மாணவர்கள் , அலுவலக ஊழியர்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
குப்பை, கூளங்கள் கொட்டப்பட்டு வருவதனால் இதிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதுடன், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால், மாணவர்கள் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன், அலுவலக ஊழியர்கள் தங்களது பணிகளை நிறைவேற்ற முடியாமலுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பை, கூளங்களை வேறு பிரதேசத்தில் கொண்டு சென்று கொட்டும் படியும், கொட்டப்பட்டுள்ள குப்பை, கூளங்களை இப்பிரதேசத்திலிருந்து அகற்றும் படியும் மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் சம்மாந்துறை பிரதேச சபை அதிகாரிகளிடம் வேண்டுகின்றனர்.
.jpg)
.jpg)
57 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago