Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
ஒலுவில் துறைமுகத்தை அண்டிய கடற்கரைப் பகுதிகள் கடுமையான கடலரிப்புக்குள்ளாகி வருகின்ற போதிலும் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் எவரும் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலமாக பலமுறை செய்திகள் வெளியிட்டுள்ளபோதும், சம்பந்தப்பட்டவர்கள் கடலரிப்பைத் தடுப்பதற்கான எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமையானது கண்டிக்கத்தக்க விடயமெனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேற்படி கடலரிப்புக்கு ஒலுவில் துறைமுக நிர்மாண நடவடிக்கைள் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கடலரிப்பின் காரணமாக, சுமார் 60 மீற்றர் தூரம் வரையிலான நிலப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடலரிப்புக்குள்ளான பகுதிகளில் அமைந்திருந்த மீனவர்களின் வாடிகள் மற்றும் கட்டிடங்கள், முற்றாக அழிவடைந்து விட்டதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.
கடலரிப்பு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், ஒலுவில் பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய குடியிருப்புப் பிரதேசங்களும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய அபாய நிலை உள்ளதாக அங்குள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தாமதமின்றி செயற்பட்டு, கடலரிப்பினைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
16 minute ago
16 minute ago
24 minute ago
s.athem bhawa Wednesday, 02 March 2011 04:01 PM
கவனம் செலுத்தவேண்டிய விடயம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
16 minute ago
24 minute ago